Wednesday, February 24, 2016

கவிப்பேரரசு வைரமுத்துவின் மருத்துவ கவிதை


மருத்துவமுறையை
மாற்றுங்கள்...

டாக்டர்...
வாயைத்திற என்பீர்கள்!
வயிறு தெரியும்படி
வாய்திறப்போம்!

நாக்கைநீட்டு என்பீர்கள்!
கல்கத்தா காளியாய்
நாக்கை நீட்டுவோம்!

முதுகைத்திருப்பி
மூச்சிழு என்பீர்கள்!
அப்போதுதான்
உண்மையாய் சுவாசிப்போம்!

அவ்வளவுதான்!
அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்!

வாசிக்கமுடியாத கையெழுத்தில்
வாயில்வராத பெயரெழுதி
காகிதங்கிழிப்பீர்கள்!

மூன்றுவேளை... என்னும்
தேசியகீதத்தை
இரண்டேவார்த்தையில்
பாடி முடிப்பீர்கள்!

போதாது டாக்டர்!

எங்கள்தேவை
இதில்லை டாக்டர்!

நோயாளி, பாமரன்!
சொல்லிக்கொடுங்கள்!

நோயாளி, மாணவன்!
கற்றுக்கொடுங்கள்!

வாய்வழி சுவாசிக்காதே!
காற்றை வடிகட்டும் ஏற்பாடு
வாயிலில்லையென்று
சொல்லுங்கள்!

சுவாசிக்கவும்
சூத்திரமுண்டு!
எத்துணை பாமரர்
இஃதறிவார்?

சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று
நுரையீரலின்
தரைதொடவேண்டும்!
தரையெங்கேதொடுகிறது?
தலைதானேதொடுகிறது!

சொல்லிக்கொடுங்கள்!

சாராயம் என்னும்
திரவத்தீயைத்தீண்டாதே!
கல்லீரல் எரிந்துவிடும்!

கல்லீரல் என்பது கழுதை!
பாரஞ்சுமக்கும்
படுத்தால் எழாது!
பயமுறுத்துங்கள்!

ஒருகால்வீக்கம்?
உடனேகவனி!
யானைக்காலின் அறிகுறி!

இருகால்வீக்கம்?
இப்போதேகவனி!
சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்!

வாயிலென்ன
ஆறாதப்புண்ணா?

மார்பகப்பரப்பில்
கரையாதக்கட்டியா?

ஐம்பதுதொட்டதும்
பசியேயில்லையா?

சோதிக்கச் சொல்லுங்கள்!

அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னா வெழுதியிருக்கலாம்!

நோயாளியை
துக்கத்திலிருந்து
துரத்துங்கள் டாக்டர்!

நோயொன்றும் துக்கமல்ல!

அந்நியக்கசடு வெளியேற
உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தமது!

சர்க்கரையென்பது
வியாதியல்ல!
குறைபாடென்று கூறுங்கள்!

செரிக்காதவுணவும் எரிக்காதசக்தியும்
சுடுகாட்டுத்தேரின் சக்கரங்களென்று
சொல்லுங்கள் டாக்டர்!

ஊமை ஜனங்களிவர்
உள்ளொளியற்றவர்!
பிணிவந்து இறப்பினும்
முனிவந்து இறந்ததாய் முணங்குவர்!

சொல்லிக் கொடுங்கள்!

யோகம் என்பது
வியாதி தீர்க்கும் வித்தையென்று
சொல்லுங்கள்!

உயிர்த்தீயை உருட்டியுருட்டி
நெற்றிப்பொட்டில் நிறுத்தச் சொல்லுங்கள்!

உணவுமுறை திருத்துங்கள்!

தட்டில்மிச்சம் வைக்காதே!
வயிற்றில் மிச்சம்வை!

பசியோடு உட்கார்!
பசியோடு எழுந்திரு!

சொல்லுங்கள் டாக்டர்!

அவிக்காத காய்களே
அமிர்தமென்று சொல்லுங்கள்!

பச்சையுணவுக்கு
பாடம் நடத்துங்கள்!

மருந்தை யுணவாக்காதே!
உணவை மருந்தாக்கு!

மாத்திரைச் சிறைவிட்டு
மனிதனே வெளியேவா!

கோணாத ஒருவன்
கூனனானான்! ஏனாம்?

அவன் டப்பாவுணவுகளையே
உட்கொண்டது தானாம்!

ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை! ஏனாம்?

அவன் உப்பில்லாவுணவுகளையே
உட்கொண்டது தானாம்!

ஆரோக்கிய மனிதனுக்குத் தேவை
அரைகிராம் உப்புதானே!

மனிதா...

உப்பைக் கொட்டிக்கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே!
செடிகொடியா நீ?

சிந்திக்கச் சொல்லுங்கள்!

உண்மை இதுதான்!

மனிதனைத்தேடி மரணம் வருவதில்லை!
மரணத்தைத்தேடியே மனிதன் போகிறான்!

டாக்டர்...
எல்லாமனிதரையும்
இருகேள்வி கேளுங்கள்!

"பொழுது
மலச் சிக்கலில்லாமல்
விடிகிறதா?

மனச் சிக்கலில்லாமல்
முடிகிறதா?"

-வைரமுத்து....

Wednesday, February 17, 2016

கருப்பட்டியும் அதன் பயன்பாடுகளும்

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து

உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன்,
கருப்பையும் ஆரோக்கி-யமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு
பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்
தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால்
வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில்
சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளி-களும்
கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய்
எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக்
கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன்,
அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

Saturday, February 13, 2016

காதலர் தினம் ஸ்பெஷல்

படித்தவுடன் பகிர நினைத்தது:

👉 காதலிக்கிறீர்கள் என்றால்.,

* உண்மையாக இருங்கள்
* சந்தேகம் தவிருங்கள்
* காதலை ரசித்து அனுபவியுங்கள்

👉 காதல் தோல்வி/பிரிவு அடைந்தவர் என்றால்.,

* அழுவதை நிறுத்துங்கள்
* தனிமையை தவிருங்கள்
* சோக பாடல்களை கேட்காதீர்கள்
(மேலும் காயப்படுத்தும் )

👉 காதலும் இல்லை, கல்யாணமும் ஆகவில்லை என்றால் .,

* மிக மிக சந்தோஷமாயிருங்கள்
* நண்பர்கள், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவளியுங்கள்
* மனதிற்கு பிடித்தவரை விரைவில் சந்தீப்பீர்கள் என நம்புங்கள்.

👉 திருமணம் ஆனவர் என்றால்.,

* உங்களுக்கான தகவல் எதுவும் இல்லை
* உங்கள் ஆட்டம் முடிந்து நாட்களாகிவிட்டது
* இந்த பதிவை டெலிட்  பண்ணிட்டு, நேரத்தை வீணாக்காமல் வீட்டை சுத்தம் செய்ற வேலை, சமையல் வேலை இருந்தா பாருங்க.....!!!!!

😝😝😝😝😝😝😝😝😝😝

பப்பாளி பலன்கள் ஏராளம் - இயற்கை மருத்துவம்

* உணவை இயற்கையான முறையில் செரிமானமடைய வைக்கும் பப்பாயின் என்சைம், பப்பாளிப் பழத்தில் உள்ளது. அதனால் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய இப்பழம் உதவும்.
* பப்பாளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் காரணமாக உடலில் மூப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது. இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கிறது.
* உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் இது. இதில் குறைந்த அளவு கலோரியும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
* நார்ச்சத்து மிக்கது, உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும். கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும் என்சைம்களைக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
* வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். காய்ச்சல், சளி, நாள்பட்ட காய்ச்சலுக்கு இது சிறந்த நிவாரணி.
* டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பப்பாளி இலைச் சாறைப் பருகக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், டெங்கு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரத்த அணுக்கள் பெருகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* பப்பாளிப் பழத்தில் இருக்கும் அழற்சியைத் தடுக்கும் என்சைம்கள் மூட்டு வலியைக் குறைப்பதற்கு உதவுகின்றன. இதிலிருக்கும் மேலும் சில என்சைம்கள் புற்றுநோய் வருவதைத் தடுப்பதிலும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
* கல்லீரலில் உருவாகும் புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைப் பப்பாளி பழம் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* பெருங்குடலில் உள்ள சளி, சீழைப் பப்பாளி ஜூஸ் குணப்படுத்தும்.
* பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் நிறைய உள்ளன. குடல் புழுக்களை அகற்றுவதில் பப்பாளி விதைகள் பெரும் பங்காற்றுகின்றன.
* பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளிகளில் வருவதற்குப் பப்பாளி பழம் உதவுகிறது.
* சிலர் காலையில் எழுந்ததுமே மிகவும் சோர்வாக உணர்வார்கள். பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது போன்ற சோர்வு இருக்கும். இவர்கள் தினமும் சில துண்டு பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
* பப்பாளிப் பழத்தில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்கும் என்சைம்கள், சிறுநீரகத்தில் படிந்திருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றன.
* பேன், பொடுகைப் போக்கும் திறன் பப்பாளிக்கு உண்டு. அதனால் தான் பெரும்பாலான ஷாம்புகளில் பப்பாளி பயன்படுத்தப்படுகிறது.
* சருமத்தின் வறட்சித்தன்மையைப் போக்கும் திறன் கொண்டது பப்பாளி பழம். தோலின் மயிர்க்கால்களில் படிந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத அழுக்குகளைப் பப்பாளியில் உள்ள என்சைம்கள் அகற்றிச் சுத்தப்படுத்தும்.
* பப்பாளிப் பழத்தின் தோல், சதைப் பகுதிகளை மசித்து முகத்தில் பூச்சாகப் பயன்படுத்தினால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை மறைந்து, முகம் பளிச்சிடும். நாள்பட்ட காயங்கள், தொற்றுகளைக் கொண்டவர்கள் பப்பாளிப் பழத்தை மசித்துப் பூசிவந்தால் சருமம் புத்துணர்வையும் பளபளப்பையும் பெறும்.

Wednesday, February 10, 2016

Share this useful information

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள்.
சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மறக்காமல் இதை பகிருங்கள்..
இதனை share செய்யுங்கள்.. மற்றவர்களும் பயணடையட்டும்..

மனைவியை மடக்க சில யோசனைகள்....😜


1. மாமியார் விரதம் இருக்கும் போது ” உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க?”னு அக்கரையா கோப படனும்(கொஞ்சம் நடிங்க பாஸ்..)

2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது “அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் “னு அவுத்து விடனும்”

3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் க்கு கூப்டாங்கனா
” இல்ல டா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது” ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லனும்

4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும் மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசனும்.

5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தனு ”சொல்லனும்.

6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.(படிப்ப பத்தி மட்டும் தான் )

7. செல்போன் ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகனும்.(வேற வழி இல்ல)

8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகனும் , பயத்துல ” அய்யோ அம்மா “ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு.

9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும், மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது.

10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா
பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..!😂😂😂

ஆண்களின்  நலன் கருதி வெளியிடுப்படுகிறது. தனியாக ஆலோசனை கேட்பவர்கள் ரூ 1000/ செலுத்தி முன்பதிவு செய்யலாம் 🙏🙏🙏

தெரிந்து கொள்வோம்

நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்
2G, E , 3G , H ,H+
Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
➖➖➖➖➖
1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.

இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
➖➖➖➖➖
2). "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.

இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.

இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
➖➖➖➖➖
3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.

இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.

இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.

இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்

இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு

இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.

இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
6). "4G" இச்சேவை 4G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.

இதன் வேகம் மிகவும் அதிகம்.

இதை இயங்க அவசியம் 4G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.

இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது

தினம் ஒரு மூலிகை


தினம் ஒரு மூலிகை

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். சந்தையில் விலை மலிவாக கிடைக்கும் மூலிகைச்சாறு மற்றும் பழரசங்களில் (செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை) எந்த ஒரு சத்துக்களும் கிடைக்காது. நோய்கள் தான் பெருகும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம். 

திங்கள் – அருகம்புல்

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

செவ்வாய் – சீரகம்

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம்,மந்தம் நீங்கும். 

புதன் – செம்பருத்தி 

இரண்டு செம்பருத்தி பூ( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்தவிருத்தி, இரத்தசுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். 

வியாழன் – கொத்துமல்லி

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மைஆகியவை நீங்கும். 

வெள்ளி – கேரட் 

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும்.இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

சனி – கரும்பு சாறு

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும்.உடல் பருமன், தொப்பை குறையும்.

ஞாயிறு – இளநீர்

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்                                                                           ......